தனியார் பள்ளியில் 4 வயது குழந்தையை காலால் மிதித்து கழுத்தை நெரித்த பெண் ஊழியர்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!
ஹைதராபாத்தில் 4 வயது சிறுமியை பெண்மணி தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளியில் 4 வயது சிறுமியை பெண் ஊழியர் கொடூரமாக தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இரண்டு பெண் ஊழியர்களுக்கு இடையேயான பிரச்சனையில், 4 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தும் அதிர்ச்சி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வரும் குழந்தையின் தாய்க்கும், மற்றொரு ஊழியரான 56 வயது பெண்மணிக்கும் முன் விரோதம் இருந்த நிலையில், தனியாக இருந்த குழந்தையை பெண்மணி கடுமையாக தாக்கியுள்ளார்.
குழந்தை மீது கொடூர தாக்குதல்:
பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை அருகே குழந்தையை அமர வைத்து தாக்கிய 56 வயது பெண்மணி தரையில் தள்ளி கழுத்தை நெரித்துள்ளார். முதலில் கையால் அடிக்க தொடங்கியவர் ஒருகட்டத்தில் காலால் மிதித்து கழுத்தில் ஏறி நின்று நெரித்துள்ளார். குழந்தை எழ முற்படும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் தாக்கி இருக்கிறார். இதனை கண்டு அதிர்ந்த அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் உடனடியாக செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணா காப்பாத்துங்க! சிறுமிக்கு தொண்டையில் சிக்கிய சூயிங்கம்! புத்திசாலித்தனமாக உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்! சிசிடிவி காட்சி...
காலால் மிதித்து நடந்த பயங்கரம்:
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியரை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது குழந்தையின் தாயுடன் முன் விரோதம் காரணமாக இந்த சம்பவத்தில் அவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதுபோல குழந்தையின் தாய் வேனில் சென்ற போதும் அவர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தாயை தரதரவென இழுத்து உதைத்து செருப்பால் அடித்த மகள்.. கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன் அரங்கேறிய கொடூரம்.!