தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா பாதிக்கப்பட்ட பிரபல நடிகை! மீண்டு வந்தது எப்படி! அவரே வெளியிட்ட வீடியோ!

Hollywood actress post video about rescue from corono

hollywood-actress-post-video-about-rescue-from-corono Advertisement

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 170க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த  ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அவரே சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Olkakurylenko

இந்நிலையில் அவர் தற்போது கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும், அதற்காக அவர் மேற்கொண்ட  சிகிச்சை குறித்தும் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் நான் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கொரோனா பாதிப்பு பாசிட்டிவ் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி நடந்து கொண்டேன். மேலும் எனக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த நிலையில், பாரசிட்டமால் எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள்  என்னிடம் கூறினார்கள். ஆனாலும் நான் கூடுதலாக வைட்டமின்  மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். அவை கொரோனா வைரஸை குணப்படுத்தாது. ஆனால் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும். அது நீங்கள் கொரோனாவிடம் போராட உதவும் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Olkakurylenko #Coronovirus #rescue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story