ஹெச்.ஐ.வி பாதித்த பெண் குளத்தில் விழுந்து தற்கொலை!. கிராம மக்களுக்கு ஏற்பட்ட அச்சம்!.
hiv affected women suicide in pond

கர்நாடக மாநிலத்தில் மோராப் கிராமத்தில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட பெண் சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்த ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அந்த ஏரி நீரில் எச்ஐவி கிருமி பரவி விட்டதாகவும் அந்த நீரை பயன்படுத்தினால் தொற்று ஏற்படும் என்று ஊர் மக்கள் கருத்தியுள்ளனர்.
மேலும் ஏரி நீரை குடிநீருக்கும் கால்நடைகளுக்கும் பயன்படுத்த கிராம மக்கள் மறுத்துவிட்டனர். எச்ஐவி பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததும் நோய் கிருமியும் இறந்துவிடும் என்றும் உடலில் இருந்து வெளியேறினால் கிருமி செயலற்று விடவும் என்றும் சுகாதாரத்துறையினர் கிராம மக்களிடம் தெளிவாக விளக்கியுள்ளனர்.
ஆனால் குளத்தின் அருகில் செல்லவே அக்கிராம மக்கள் தயங்கி நிற்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரே குடிநீர் ஆதாரமாக இருப்பதால், அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு குளத்தில் உள்ள மொத்த நீரையும் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் இருந்து மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.