ஆதரவற்ற இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்! வைரலாகும் வீடியோ காட்சி...
திருவனந்தபுரம் அருகே இந்து பெண்ணின் இறுதி ஆசையை மதித்து முஸ்லிம் நபர் இறுதிச் சடங்கு செய்த சம்பவம் மத நல்லிணக்கத்தின் சிறந்த உதாரணம்.
சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் அரிய நிகழ்வு திருவனந்தபுரம் அருகே நிகழ்ந்துள்ளது. மதத்தை தாண்டிய மனிதநேயம் எப்போதும் மக்களை ஒன்றுபடுத்தும் என்பதை இந்த சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது.
பெண்ணின் இறுதி ஆசை
திருவனந்தபுரம் அருகே கடினம்குளத்தில் செயல்படும் கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராக்கி (44) என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இறப்பதற்கு முன், தன்னுடைய இறுதி ஆசையாக இந்து முறைப்படி சடங்கு நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மனிதநேயம் வெளிப்பட்ட தருணம்
அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தக் கோரிக்கையை மதித்து கடினம்குளத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சஃபீர் என்ற நபர் முன்வந்து, இந்து மதச் சடங்குகளுக்கேற்ப இறுதிச் சடங்கு செய்தார். “இந்து பெண்ணின் சடங்கில் பங்கேற்பதற்கு என் மதம் ஒரு தடையல்ல” என அவர் உருக்கமாக கூறினார்.
மக்களின் பாராட்டு
இந்த மனிதாபிமான செயலை பாராட்டி உள்ளூர் மக்கள், கிராமத்தினர் மற்றும் ஜமாத் ஒன்றியத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். சம்பவம் மத நல்லிணக்கம் மற்றும் மனித நேயத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டாக சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதங்களை தாண்டி மனிதநேயத்தை முன்னிறுத்தும் இச்சம்பவம், சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மறக்கமுடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்னமா நீ இப்படி இருக்க! திருமண விருந்தில் ஒரே பெண் செய்த வேலையை பாருங்க! ஷாக் ஆகிடுவீங்க.... வைரல் வீடியோ!