×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மசூதியின் உள்ளே கோலாகலமாக இந்து முறைப்படி நடந்த திருமணம்! வியப்பூட்டும் நெகிழ்ச்சி சம்பவம்!

Hindu marriage done in mosque at kerala

Advertisement

கேரளா ஆலப்புழா மாவட்டம் சேரவல்லி என்ற பகுதியில் வசித்து வந்தவர் பிந்து. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் இவர் தனது மகன் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த பிந்து படிக்க வைக்க பணம் இல்லாத நிலையில் தனது இரு மகள்களின் படிப்பையும் பாதியிலேயே நிறுத்திவிட்டார். 

மேலும் தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைக்க கடுமையாக முயற்சித்து வந்த பிந்து ஆலப்புலா கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சரத் என்ற இளைஞருடன் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளார். ஆனால் திருமணத்தை நடத்தி வைக்க பணம் இல்லாமல் மிகவும் சிரமபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த நஜிமுதீன் என்பவரின் ஆலோசனைப்படி சேரவல்லி ஜமாத் கமிட்டியிடம் கடிதம் எழுதி உதவி கேட்டுள்ளார். 

அதனைத் தொடர்ந்து கமிட்டியில் உள்ள அனைவரும் திருமண செலவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்ட நிலையில் பிந்துவின் மகள் அஞ்சுவுக்கு மசூதியில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு மசூதியின் உள்ளேயே இந்து முறைப்படி திருமண நடைபெற்றது. மேலும் அஞ்சுக்கு 10 சவரன் நகை, 2லட்சம் ரூபாய் பணம் பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் இந்து முஸ்லீம் என அனைவருக்கும் சிறப்பாக விருந்தளிக்கப்பட்டது.

 இந்நிலையில் இது குறித்து விவரமறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் புதுமண தம்பதிகளுக்கும்,  மசூதி நிர்வாகத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jamath committy #marriage #KERALA
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story