பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.! பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா?? பரவும் தகவல்!!
தேனிலவிற்காக பஹல்காம் சென்றபோது பயங்கரவாதிகள் நடத்தியதாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வால் மனைவி ஹிமான்ஷி ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த பட்டியல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி
அதில் பஹல்காம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வால் மனைவி
ஹிமான்ஷி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: திருமணமாகி 7 நாளிலேயே... தேனிலவு சென்ற இடத்தில் மனைவி கண்முன்னே நேர்ந்த பயங்கரம்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா ஹிமான்ஷி
அவர்களில் தேனிலவிற்காக மனைவியுடன் சென்ற வினய் நர்வாலும் சுட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த கணவரின் உடலின் அருகே அமர்ந்து அவரது மனைவி கதறி துடித்த காட்சிகள் வைரலாகி நெஞ்சை உலுக்க செய்தது. இந்நிலையில் தற்போது ஹிமான்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: அட.. இது வித்தியாசமா இருக்கே.! ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்னனு பார்த்தீங்களா!!