கொரோனா எதிரொலி: முதல்முறையாக அனைத்து கிளைகளையும் மூடிய முன்னனி மோட்டார் நிறுவனம்
Hero motocorp closed all branches ahead of corono

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் முன்னனி மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது அனைத்து கிளைகளையும் மூடியுள்ளது.
உலக அளவில் மூன்று லட்சத்திற்கும் மேலான பாதிப்பு, 12000 க்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் 320 பேருக்கு மேல் பாதிப்பு மற்றும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னனி மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் கொலம்பியாவில் உள்ள தனது உற்பத்தி மற்றும் அஷம்பாளி கிளைகளை இந்த மாத இறுதிவரை மூடுவதாக அறிவித்துள்ளது.
மேலும் அநநிறுவனத்தின் தொழிநுட்பதுறை ஊழியர்கள் மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என கூறியுள்ளது. ஏற்கனவே மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் குறைந்து வரும் நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தற்போது உற்பத்தியிலும் தொய்வு ஏற்பட துவங்கியுள்ளது.