மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பி அடிப்பதை தவிர்க்க வித்தியாசமான தலைக்கவசம்!
helmet for exam

கர்நாடக மாநிலத்தில் தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தவிர்க்க அனைவரின் தலையிலும் அட்டைப்பெட்டி அணிவிக்கப்பட்டு தேர்வு நடத்தியுள்ளனர். அந்தப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அணைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படையினர் அமைத்து சோதனை நடத்துவது வழக்கம். இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து எழுதுவதை தடுக்க புதுவிதமான நூதன முறையை கடைபிடித்துள்ளனர்.
அந்த மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் தேர்வின்போது மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதையும், அருகில் உள்ளவர்களை பார்த்து எழுதுவதை தடுக்கவும், தேர்வு எழுதிய அனைவரின் தலையில் அட்டைப்பெட்டியை மாட்டி தேர்வு நடத்தியுள்ளனர்.
மாணவர்கள் வினாத்தாளை பார்த்து பதில் எழுதுவதற்கு வசதியாக அட்டைப்பெட்டியில் இரண்டு ஓட்டைகள் போட்டு இருந்தது. அதன் வழியாக மாணவர்கள் வினாத்தாளை பார்த்து, விடைத்தாளில் எழுதியுள்ளனர். அந்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க இது சோதனை முயற்சி என்று கூறியுள்ளது.