#அதிர்ச்சி: ஓடும் ரயிலில் இருந்த மர்ம இரும்புப் பெட்டி! திறந்த போது அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி....! உறைந்துபோன ஒட்டுமொத்த பயணிகள்.!!!
உத்தரப் பிரதேசத்தில் கோமதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் தலை துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓடிக் கொண்டிருந்த கோமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தலை துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சப்ராவில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரயிலில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பயணிகள் யாரும் அருகில் இல்லாமல் சந்தேகத்திற்கிடமாக வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டி மற்றும் ஒரு பையை கவனித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரும்புப் பெட்டிக்குள் அதிர்ச்சி
தகவலின்படி, சம்பவ இடத்துக்கு வந்த RPF அதிகாரிகள் அந்த இரும்புப் பெட்டியை உடைத்து சோதனை செய்தபோது, அதற்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் உடல் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்கள் தனித்தனியாக பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு, அருகில் இருந்த மற்றொரு பைக்குள் வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காண சிக்கல்
கொல்லப்பட்ட பெண்ணுக்கு சுமார் 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், சடலத்தின் தலை இதுவரை கிடைக்காததால் அவர் யார் என்பது குறித்து போலீசாருக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை.
இதையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ள போலீசார், கோமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களின் விவரங்கள் மற்றும் CCTV காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
3 தனிப்படைகள் அமைத்து விசாரணை
இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன, பெண் எங்கு கொல்லப்பட்டார், ரயிலில் உடல் எப்போது கொண்டு வரப்பட்டது போன்ற கேள்விகளுக்கான பதில்களை கண்டறிய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
பெண்ணின் அடையாளம் மற்றும் குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த பெரியப்பா மகனுடன் திருட்டுத்தனமாக உறவு! தகராறில் காதலனே கடைசியில் எமனாக மாறிய கொடூரம்.... சடலத்தை எரித்து பகீர் பின்னணி...!!!