3 வயது குழந்தையை சீரழித்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்..! குழந்தைதையை தேடுவது போல் நாடகமாடிய கொடூரன்! குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!!
உத்தரப் பிரதேசம் ஹமீர்பூரில் 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்டை வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார். தப்பிக்க முயன்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை அண்டை வீட்டைச் சேர்ந்த 30 வயது நபர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றுள்ளார்.
குழந்தையைத் தேடுவது போல் நாடகமாடியதாக குற்றச்சாட்டு
ஹமீர்பூர் மாவட்டம் முஸ்குரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அண்டை வீட்டைச் சேர்ந்த ஹீராலால் (30) என்பவர் ஆசை வார்த்தை கூறி குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அப்பா... என்னை கூட்டிட்டு போங்க.! நானும் வரேன்... கதறி அழும் 3 வயது குழந்தை...! நகர முடியாமல் தவிக்கும் தந்தை... கண்கலங்க வைக்கும் காட்சி...!!!
அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு குழந்தையைக் கொண்டு சென்ற அவர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, பின்னர் குழந்தையின் ஆடையைக் கொண்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பிறகு, குழந்தையைக் காணவில்லை எனத் தேடிய குடும்பத்தினருடன் சேர்ந்து அவரும் தேடுவது போல் நடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் மீது கல் வீச்சு; துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி காயம்
குழந்தையின் உடலை மீட்க போலீசார் வந்தபோது ஆத்திரமடைந்த கிராம மக்கள், காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹீராலாலை போலீசார் கைது செய்தனர்.
திங்கட்கிழமை அதிகாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, அவர் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார் . இதையடுத்து போலீசார் நடத்திய தற்காப்புத் துப்பாக்கிச் சூட்டில் அவரது இரு கால்களிலும் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளியின் வீட்டின் ஒரு பகுதி இடிப்பு
இதற்கிடையே, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டின் ஒரு பகுதி புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையை இழந்த தாயின் வேதனையும், கிராம மக்களின் ஆத்திரமும் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.