நீதிபதியின் மனைவி, மகனை நடுரோட்டில் வைத்து துப்பாக்கி சூடு!. அதிர்ச்சி வீடியோ!.
நீதிபதியின் மனைவி, மகனை நடுரோட்டில் வைத்து துப்பாக்கி சூடு!. அதிர்ச்சி வீடியோ!.
அரியானா மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபரால் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் நடுரோட்டில் சுட்டுத்தள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள சந்தை பகுதியில் நேற்று மதியம் 3.30 மணிக்கு பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்த அந்த இடத்தில் பாதுகாவலர் உடை அணிந்திருந்த ஒரு நபர், தன்னுடைய கைத்துப்பாக்கியை வைத்து நீதிபதி கிருஷ்ணந்த் சர்மாவின் மனைவி மற்றும் மகனை சுட்டுள்ளார்.
இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே ரத்த காயங்களுடன் கீழே விழுந்தனர். அந்த சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.