Khel Ratna: கேல் ரத்னா விருதை பெற்றார் செஸ் வீரர் குகேஷ்.!
Khel Ratna: கேல் ரத்னா விருதை பெற்றார் செஸ் வீரர் குகேஷ்.!

செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கைகளால் வழங்கப்பட்டது. கேல் ரத்னா விருதை பெற்றுக்கொண்ட குகேஸ், மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு 2 பதக்கம் வென்ற மனு பார்க்கர், இந்திய அளவில் பாராட்டுக்களை பெற்றார். அதேபோல, குகேஷ் சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் அடைந்தார். இதனால் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய இருவருக்கும், அவர்களின் திறனை ஊக்குவித்தும், பாராட்டியும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நண்பனின் மனைவியிடம் அத்துமீறல்; உண்மை அறிந்து கொலைப்பழிக்கு ஆளான விபரீதம்.. நட்பு துரோகமானதால் சோகம்.!
அதேபோல, பாரா தடகள பிரிவில் பிரவீன் குமார், ஹாக்கி வீர்ர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோருக்கும் கேல் ரத்னா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: முன்விரோதத்தால் பயங்கரம்; 3 பெண்கள் இரும்பு கம்பியால் அடித்தே கொலை.. 28 வயது இளைஞர் வெறிச்செயல்.!