நான் இறந்த பிறகு என்னோட பிணத்தை ஒரே ஒருமுறை கட்டிபிடிங்க! உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை! பகீர் பின்னணி...
நான் இறந்த பிறகு என்னோட பிணத்தை ஒரே ஒருமுறை கட்டிபிடிங்க! உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை! பகீர் பின்னணி...
குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பூமிகா சோரதியா (வயது 25), ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். கடுமையான உழைப்பாளியாக இருந்த பூமிகா, சமீபத்தில் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று, வங்கி வளாகத்திலேயே அவர் பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
போலீசார் விசாரணையில், தற்கொலைக்குறிப்புக் கடிதம் கிடைத்தது. அதில், ₹28 லட்சம் வரை கடன் சுமை உள்ளதாகவும், அதை திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தனது பி.எப். தொகை பெற்றோருக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும், இறப்புக்குப் பிறகு பெற்றோர்கள் ஒரே முறை தன்னை கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதே கடைசி ஆசை எனவும் எழுதியிருந்தார்.
இதையும் படிங்க: மாமனாருக்கு மசாஜ்! மனைவியை மற்றவர்களுக்கு விருந்தாக்க நினைத்த கணவன்! வெளிவந்த பகீர் தகவல்...
விசாரணையின் போது, இந்த கடன் ஆன்லைன் மோசடி காரணமாக ஏற்பட்டது என்பது தெரியவந்தது. டெலிகிராம் செயலியில் ஒரு வேலைவாய்ப்பு குழுவில் இணைந்த பூமிகா, ஆரம்பத்தில் ₹500 முதலீட்டில் ₹700 இலாபம் என கூறி பணிகளை பெற்றார். ஆரம்ப லாபம் கிடைத்ததால், நம்பிக்கையுடன் அதிக தொகையை முதலீடு செய்து, கடன் வாங்கி ₹28 லட்சம் வரை செலவிட்டார். ஆனால் பின்னர் எந்த வருமானமும் வராமல், மோசடியில் சிக்கி விட்டார்.
பூமிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட டெலிகிராம் மோசடிக்குழு உறுப்பினர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம், டிஜிட்டல் வேலைவாய்ப்பு முறைகளின் அபாயங்களை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டுகிறது.
அரசு அதிகாரிகள், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டுப் பேனர்களில் ஈர்க்கப்படாமல், நம்பிக்கையற்ற வழிகளில் பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஸ்கூட்டியில் சென்ற மாணவிகள்! நடுரோட்டில் கன்னத்தில் ஓங்கி அறைந்து ஆக்ரோஷமாக பேசிய போக்குவரத்து காவலர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...