மது போதையில் மரண குத்து குத்திய மாமியார்.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை.!
மது போதையில் மரண குத்து குத்திய மாமியார்.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை.!
திருமண விருந்தில் மது போதையில் மாமியார் நடனமாடியதால் மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரதேசம் மாநிலம் சம்பல் என்ற பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் திருமணத்திற்காக பெண்ணின் வீட்டார் அனைவரும் பண்டபத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கே மணப்பெண் நடனமாடி உறவினர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்துள்ளார். மேலும் மணப்பெண்ணின் தாய் சிகரெட் பிடித்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகள் முகத்தில் புகையை விட்டு தள்ளியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விருந்திற்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் மணப்பெண்ணின் தாய் மது அருந்தியும், சிகரெட் பிடித்தும் குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் மணமகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மணமகள் மற்றும் அவரது தாயார் இருவரின் செயல்களால் கடுப்பான மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியுள்ளார்.