×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணத்திற்கு முதல்நாள் பிச்சையெடுக்கும் கல்யாண மாப்பிள்ளை ! இதுதான் காரணமா!!

groom begging the previous day of wedding

Advertisement

மதுரையில் சௌராஷ்டிரா மக்களில் முசுவாதி என்ற வீட்டு பெயரைக் கொண்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் பொழுது வித்தியாசமான முறை ஒன்றை பின்பற்றி வருகின்றனர்.

அதாவது திருமணத்திற்கு முதல் நாள், திருமணம் செய்யவிருக்கும் மணமகனை முகத்தில் திருநீறு பூசி,கண் மை வைத்து முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்கின்றனர்.

 இதனை தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் பொங்கல் வைத்து அதனை மணமகனுக்கு படையலிட்டு சாமி கும்பிட்ட பின் மணமகன் பட்டினப் பிரவேசம் என்ற நகர்வலம் செல்வார்.

 அவ்வாறு சென்று மணமகன் தனது உறவினர்கள் மற்றும் அனைத்து மக்களிடமும் பிச்சை எடுக்க வேண்டும் அப்பொழுது உறவினர்கள் தங்களிடம் பிச்சை கேட்கும் மணமகனுக்கு பாதபிஷேகம் செய்து குலதெய்வத்தை போல் வணங்குவர். பின்னர் அவரது காலில் விழுந்து திருநீறு பூசி ஆசி பெறுவர்.

 பின்னர் பட்டினப் பிரவேசம் முடிந்த நிலையில் திருமண மண்டபத்திற்கு திரும்பும் மணமகன் கொண்டுவந்த காணிக்கையின் ஒரு பகுதியை  திருமண செலவிற்கும் மீதத்தை  அவர்களது குல சாமிக்கும் வழங்குவார். இந்த வழக்கம் அன்று முதல் இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#groom #begging #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story