காதல் திருமணத்தால் ஆத்திரம்.. பச்சிளம் பிஞ்சை கொல்ல முயன்ற பாட்டி.. மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
பேத்தியை கொலை செய்ய முயன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டார்.
பிறந்து சில நாட்களே ஆகிய பச்சிளம் குழந்தையை பாட்டி கொலை செய்ய முயன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் திருமணம்:
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டம், மாமிடாக்குலப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் அசோக் குமார். இவரின் மனைவி பூஜிதா. தம்பதிகள் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 15 வயதில் பிரசவம்.. குழந்தை பிறந்த சில நாட்களில் சிறுமி மரணம்.. காதல் திருமணத்தால் கிருஷ்ணகிரியில் ஷாக்.!
குழந்தை பிறந்தது:
தற்போது அனந்தபுரத்தில் வசித்து வரும் இவர்களுக்கு 2 மாதங்களுக்கு முன் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பச்சிளம் குழந்தைக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் கொடுக்கப்பட்டுள்ளது.
கோபம்:
மகனின் காதல் திருமணத்தால் அசோக் குமாரின் தாய் சத்தெம்மா ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனிடையே, குழந்தையை பார்க்க அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்மணி, திடீரென குழந்தையை 2 வது மாடியில் இருந்து வீசி இருக்கிறார். அப்போது, குழந்தை கால்வாயில் கிடந்த காலி பாட்டில்கள் மீது விழுந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பியது.
தொடர்ந்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கவனிக்க ஆட்கள் இல்லை.. பாலுக்காக கதறிய பச்சிளம் பிஞ்சு.. கொன்று புதைத்த தாய்.. திருவண்ணாமலையில் சோகம்.!