அரசு அலுவலகத்திற்குள் ஹெல்மெட் அணிந்து, மரணபீதியுடன் பணிபுரியும் அதிகாரிகள்.! வெளியான பகீர் காரணம்!!
govt servent wearing helmet while working in office

உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள மின்சார துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் அவர்களது தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் அதிர்ச்சி அளிக்கும் பலவிவரங்களையும் வெளியிட்டுள்ளனர். அதாவது மின்சார துறை அலுவலகத்தில் மேற்கூரை கான்கிரீட் மோசமாக பாழடைந்துள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அதுமட்டுமின்றி அறையின் நடுவில் உள்ள ஒரு தூண் மட்டுமே கட்டிடத்தின் மேற்கூரையை தாங்கிப் பிடித்திருப்பதாகவும் ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கான்கிரீட் இடிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே தாங்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரிவதாக அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர் .
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கட்டிடத்தை புதுப்பித்து தருமாறும், இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்குமாறும் உயரதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மழைக்காலத்தில்கட்டிடம் அதிகமாக ஒழுகுவதால் தாங்கள் குடைகளுடன் பணிபுரிந்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி ஆவணங்களை பாதுகாக்க போதுமான அலமாரிகள் இல்லாத நிலையில் அனைத்தும் அட்டைப் பெட்டிகளில் கிடப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.