பல பெண்களுடன் உல்லாசம்.! ஆதாரங்களுடன் அம்பலமான அரசு அதிகாரியின் காதல் சில்மிஷங்கள்!!
govt officer enjaoyed with women in office
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி தேசிய கிராமப்புற வாய்ப்பு உறுதிதிட்டத்தில் மாவட்ட அளவிலான அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் மானிக்கியாராவ். இவர் பகல் முழுவதும் வேலை பார்க்கும் நிலையில், இரவு நேரங்களில் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல பெண்களை வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அங்கிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரை ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என போலீசார்கள் செய்தியாளர்களுடன் வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்திற்கு இரவு நேரத்தில் சென்றுள்ளனர். அங்கு மாணிக்கியராவ் ராய்கோடூ மண்டலத்தில் கள உதவியாளராக பணிபுரிந்து வரும் லட்சுமி என்பவரை உல்லாசமாக இருப்பதற்காக வரவழைத்துள்ளார்.
அப்பொழுது போலீசார்கள், செய்தியாளர்களுடன் வருவதைக் கண்டு உடனே மாணிக்கியராவ் அங்கிருந்த கட்டிடத்தின் மேல் ஏறி ஒளிந்து கொள்ளும் படி லட்சுமியுடன் வலியுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார்கள் அலுவலகம் முழுவதும் தேடியுள்ளனர். மேலும் அலுவலத்தின் கட்டிடங்கள் மீது ஏறி பார்த்துள்ளனர்.
அப்பொழுது அங்கு லட்சுமி பதுங்கி இருப்பதைக் கண்டு, அவரை கீழே இறங்க வைத்துள்ளனர் இதைத்தொடர்ந்து அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.