அதிசயம்! மனித குழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு! வைரல் புகைப்படம் உள்ளே!
Goat gives birth to human baby in Karnataka
இந்த உலகில் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான சம்பவங்கள் ஏதாவது ஓன்று நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள மதுரகிரி அருகே உள்ள கிராமத்தில் ஜானகி - ரம்யா என்பவர்கள் வளர்த்து வந்த ஆடு ஓன்று மனித உருவத்தில் குட்டி போட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பிட்ட ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டு குட்டி சாதாரண ஆடுகளை போலவும், மற்றொரு குட்டி பார்ப்பதற்கு மனித உருவத்திலான குழந்தை போலவும் இருந்துள்ளது. இந்த செய்தி தீயாய் பரவியதை அடுத்து பல்வேறு கிராமங்களில் இருந்து ஆட்டு குட்டியை காண மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதினர்.
அந்த கூட்டத்தில் சிலர் இது கடவுளின் அவதாரம் என்றும், கடவுள் பிறந்துள்ளார் என்றும் அந்த ஆட்டு குட்டியை வணங்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மனித உருவத்தில் பிறந்த அந்த ஆட்டுக்குட்டி சிறிது நேரத்தில் இறந்துபோனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.