இன்ஸ்டா பழக்கத்தால் இன்னலை சந்தித்த 14 வயது சிறுமி; முன்னாள் காதலனால் வந்த வினை.!
இன்ஸ்டா பழக்கத்தால் இன்னலை சந்தித்த 14 வயது சிறுமி; முன்னாள் காதலனால் வந்த வினை.!
கோவா மாநிலத்தில் உள்ள மார்கோ பகுதியைச் சார்ந்தவர் ஹசாரா. அப்பகுதியை சார்ந்த 14 வயது சிறுமியுடன் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் நட்பு ரீதியாக பேசிவந்த நிலையில், காதல் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஹசாராவின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் சிறுமி தனது காதலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
இது ஹசாராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர் சிறுமியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து புகைப்படத்தை திருடி அதனை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட சிறுமி தனது தந்தையின் மூலமாக காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.