தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உபியில் பயங்கரம்... ஆசையாக சென்ற காதலன்.!! ஆணுறுப்பை அறுத்த காதலி.!! பின்னணி என்ன.?

உபியில் பயங்கரம்... ஆசையாக சென்ற காதலன்.!! ஆணுறுப்பை அறுத்த காதலி.!! பின்னணி என்ன.?

girl-friend-and-her-brothers-cut-a-man-genital-sparks-s Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து காதலனின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்தப் பெண் உட்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வயதில் மூத்த பெண்ணுடன் காதல்

உத்திர பிரதேச மாநிலம் கோராக்பூர் நகரை சேர்ந்தவர் மிதுன். 22 வயதான இவர் தன்னைவிட 8 வயது மூத்த பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். மேலும் மிதுன் தனது காதலியுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இரு குடும்பத்தினருக்கும் ஏற்கனவே பகையிருக்கும் சூழலில் மிதுன் அந்த பெண்ணை காதலிப்பதை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

India

வீட்டிற்கு வரவழைத்து ஆணுறுப்பை அறுத்த காதலி

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மிதுனை தனது வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார் அவரது காதலி. இதனைத் தொடர்ந்து மிதுன் தனது காதலியின் வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த காதலியின் சகோதரர்கள் 4 பேர் அவரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். மேலும் அவர்கள் 4 பேரும் சேர்ந்து மிதுனில் கை மற்றும் கால்களை பிடித்துக் கொள்ள அவரது காதலி மிதுனின் ஆணுறுப்பை அறுத்திருக்கிறார். இந்தக் கொடூர சம்பவத்தில் படுகாயமடைந்த மிதுனை அவரது காதலியின் சகோதரர்கள் தூக்கி தெருவில் வீசியிருக்கின்றனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மீதுனின் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் தனது மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதையும் படிங்க: "அப்பா... விட்ருங்க ப்ளீஸ்" 13 வயது மகள் பாலியல் பலாத்காரம்.!! வளர்ப்பு தந்தை கைது.!!

காவல்துறை விசாரணை

மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையில் புகாரளித்தார். அவரது புகாரின் பேரில் அந்தப் பெண் மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடம் விசாரித்த போது மிதுன் தங்களது சகோதரியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் அவரது ஆணுறுப்பை அறுத்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை மறுத்திருக்கும் மிதுனின் தந்தை, தங்களது குடும்பத்தை பழி வாங்குவதற்காக இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: அடப்பாவாமே... அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்.!! மர்ம நபருக்கு வலைவீச்சு.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #uttarapradesh #Crime #Man's Genital Mutilated #5 People Arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story