செல்போனில் கணவருடன் பேசியபடியே, கட்டிலில் அமர்ந்த பெண் துடிதுடிக்க உயிரிழப்பு!! நடுநடுங்கவைத்த அதிர்ச்சி சம்பவம்!!
girl dead by attacking snake

ஹரியானா மாநிலம் கோரக்பூர் அருகேயுள்ள ரியான்வ் கிராமத்தில் வசித்து வந்தவர் கீதா. இவரது கணவர் ஜெய் சிங் யாதவ். இவர் தாய்லாந்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் கீதா வெளிநாட்டில் இருந்த தனது கணவருடன் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்பொழுது விளையாடியபடியே வீட்டுக்குள் புகுந்த 2 பாம்புகள் கீதாவின் படுக்கையறைக்குள் நுழைந்துள்ளது. மேலும் அங்கிருந்த அவரது கட்டிலின் மீது பின்னி பிணைந்து இருந்துள்ளது. இதை கவனிக்காத கீதா செல்போனில் பேசிக்கொண்டே கட்டில் மேல் அமர்ந்துள்ளார்.
அப்பொழுது கட்டிலின் மீது இருந்த பாம்புகள் ஆவேசமாக சீறி கீதாவை கொத்தியுள்ளது. இந்தநிலையில் விஷம் தலைகேறியநிலையில் கீதா சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன கீதாவின் குடும்பத்தார்கள் உடனடியாக அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அனால் அதற்குள் கீதா உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவரது கட்டிலில் 2 பாம்புகள் அப்படியே இருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்து அவற்றை அடித்துக் கொன்றுவிட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.