×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தெருவில் இறங்கி, செம மாஸ் குத்தாட்டம் போட்ட அழகிய இளம்பெண்! ஏன் தெரியுமா? வைரலாகும் தெறிக்கவிடும் வீடியோ!

Girl dance in street to welcome her sister from hospital

Advertisement

மகாராஷ்டிரா புனே தங்காவடி பகுதியை சேர்ந்தவர் சலோனி. இவரது தந்தைக்கு கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனை அடுத்து, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்  சலோனியை தவிர வீட்டில் இருந்த மற்ற 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்கள் அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

மேலும் சலோனி மட்டும் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் சலோனியை தீண்டத்தகாதவர் போல் வித்தியாசமாக பார்த்துள்ளனர். மேலும் யாரும் ஏதேனும் உதவி வேணுமா என கூட கேட்கவில்லை. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.

இந்நிலையில் சலோனியின்  குடும்பத்தினர்கள் அனைவரும் கொரோனாவிலிருந்து மீண்டு ஒவ்வொருவராக வீடு திரும்பியுள்ளனர். மேலும்  இறுதியாக கடந்த சில தினங்களுக்கு  முன்பு சலோனியின் அக்கா கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

இதற்கிடையில் தனது அக்காவை வரவேற்க வேண்டும், தனது வீட்டின் அருகே வசிப்பவர்களுக்கு தங்களது குடும்பம் மிகவும் உற்சாகமாக இருப்பதை உணர்த்த வேண்டும் என எண்ணிய சலோனி தனது அக்கா வந்தபோது  தெருவில் இறங்கி தரமான குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி  வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dance #corono #Pune
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story