×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிஆத்தீ... மருத்துவமனை ICU ஜன்னல் கம்பிகளில் 10 அடி நீளம்முள்ள நாகப்பாம்பு! அலறி ஓடிய மக்கள்..... உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு நேர்ந்த கதி என்ன?.. வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச சாகர் அரசு மருத்துவமனையின் ICU பகுதியில் நாகப்பாம்பு புகுந்ததால் நோயாளிகள், உறவினர்கள் அச்சம். பாதுகாப்பு குறைபாடு கேள்விக்குறி.

Advertisement

மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அருகே சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஊர்ந்து சென்றது அங்கு இருந்தவர்களை பதற வைத்தது. நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் திடீரென அச்சத்தில் உறைந்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ICU அருகே பாம்பு தோன்றிய பரபரப்பு

தகவலின்படி, உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த ICU பகுதியின் ஜன்னல் கம்பிகளில்சுமார் 10 அடி நீளம்முள்ள அந்தப் பாம்பு நீண்ட நேரம் சுழன்றாடியது. ஜன்னல் கண்ணாடி அப்பால் இருந்தாலும், அதன் அசைவுகள் அங்கிருந்தவர்களை பதறச் செய்தன. சிலர் உடனே வீடியோ பதிவு செய்த நிலையில், அந்த காட்சிகள் வெளியேறி வைரலாகி விட்டன.

பாதுகாப்பு குறைபாடு குறித்த குற்றச்சாட்டு

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தின் பராமரிப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மருத்துவமனைக்கு அருகிலுள்ள தோட்டங்கள் மற்றும் புதர்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் விஷ ஜந்துக்கள் உள்ளே நுழைகின்றன என்று ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சுவர்களில் உள்ள விரிசல்கள், கழிவறை ஓட்டைகள் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரு நொடி தாங்க.... 5 வயது புள்ளையை தரையில் இழுத்து போட்டு கடித்து குதறிய தெரு நாய்! சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி!

அதிகரிக்கும் பாம்பு நடமாட்டம்

கடந்த சில நாட்களாகவே அந்தப் பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருத்துவமனை பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 

இதையும் படிங்க: ஐயோ... பாக்கவே சகிக்கல! இத எப்புடி.... ஓடும் ரயிலில் டாய்லெட் அருகே நபர் செய்த அட்டூழியத்தின் அதிர்ச்சி வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sagar hospital #நாகப்பாம்பு #ICU incident #hospital safety #Madhya Pradesh News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story