10 அடி நீள கரு நாகத்தை பிடித்து சால்வை போல் கழுத்தில் போட்டுக்கிட்ட பாம்பு தோழி! வைரல் வீடியோ..!!!
பீகாரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கிராமத்துக்குள் புகுந்த 10 அடி கருநாகத்தை பெண் பாம்பு பிடிப்பாளர் ஜானகி தேவி பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார்.
நேபாள எல்லைப் பகுதிகளிலும் வட மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பீகார் மாநிலத்தில் பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் மற்றும் விஷ ஜந்துக்கள் கிராமங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. அந்த வகையில், ஒரு வீட்டிற்குள் புகுந்த கருநாகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெள்ளத்தில் இருந்து தப்பி வீட்டிற்குள் புகுந்த நாகம்
பீகார் மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், முன்னி லால் என்பவரது வீட்டின் சமையலறைக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கருநாகம் திடீரென நுழைந்தது. வீட்டினுள் பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டதால் சில நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: நிமிஷத்துல இப்படியா நடக்கணும்! கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பறந்து போன பைக்குகள்! திக் திக் விபத்து வீடியோ!!!
பெண் பாம்பு பிடிப்பாளரின் தைரியமான மீட்பு
இதையடுத்து, அப்பகுதியில் 'பாம்புத் தோழி' என்று அழைக்கப்படும் ஜானகி தேவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். எந்த பதற்றமும் இன்றி நிதானமாக செயல்பட்ட அவர், கருநாகத்தின் தலைப்பகுதியை பாதுகாப்பாகப் பிடித்து முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் அதன் உடலை கழுத்தில் சுற்றியபடி எடுத்துச் சென்ற காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.
வனத்துறையின் முக்கிய எச்சரிக்கை
அதன்பின், பாம்பிற்கு எந்தக் காயமும் ஏற்படாத வகையில் அருகிலிருந்த அடர்ந்த வனப்பகுதியில் ஜானகி தேவி அதை பாதுகாப்பாக விடுவித்தார். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இதற்கிடையே, வெள்ளநீர் காரணமாக பாம்புகள் மற்றும் பிற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரக்கூடும் என்பதால், வீடுகளைச் சுற்றுப்புறம் சுத்தமாக வைத்திருக்கவும், பாம்புகள் நுழைந்தால் அவற்றைக் கொல்லாமல் வனத்துறை அல்லது பயிற்சி பெற்ற பாம்பு பிடிப்பாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் வனத்துறை பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அய்யோ... மழையில் இருந்து தப்பிக்க கடை கூரையில் ஏறிய மாடு! சட்டுனு சறுக்கி விழுந்ததால் பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ..!!!