இன்சூரன்ஸ் மோசடி... 50 கோடிக்காக தாய், தந்தை, மனைவி படுகொலை.!! 37 வயது வாலிபர் கைது.!!
இன்சூரன்ஸ் மோசடி... 50 கோடிக்காக தாய், தந்தை, மனைவி படுகொலை.!! 37 வயது வாலிபர் கைது.!!
உத்திரபிரதேசத்தின் ஹபூரில் தனது முதல் மனைவி, சொந்த தந்தை முகேஷ் சிங்ஹல்(55), தாய் பிரபாதேவி ஆகியோரை கொன்று 50 கோடி உயிர் காப்பீடு தொகை பெற முயன்ற 37 வயது விஷால் சிங்ஹலை போலிசார் கைது செய்தனர்.
விஷால் சிங்ஹால் முன்னதாகவே 1.5 கோடி காப்பீடு பெற்ற நிலையில் மேலும் காப்பீடு கோரிய போது அவரது நான்காம் மனைவி ஏற்கனவே இறந்தவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளதென போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து விசாரித்த போலீசார், சாம்பலில் 11 மாநிலங்களில் போலி விபத்து மோசடி விசாரணை விஷாலின் செயல்களுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர்.
இதனையடுத்த விசாரணையில் தனது தந்தையின் 50 கோடி காப்பீட்டுக்காக தந்தை, தாய் மற்றும் முதல் மனைவியை கொலை செய்து நாடகம் நடத்தியதை போலீசார் கண்டறிந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு சாம்பல் எஸ்.பி கிருஷ்ணகாந்த், கண்காணிப்பு வங்கி பதிவுகளால் விஷால் விபத்துகளை திட்டமிட்டு செய்துள்ளார் என உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: மகளை மிரட்டி சீரழித்த தந்தைக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை; கேரளா நீதிமன்றம் அதிரடி.!
பல்வேறு மோசடிகளையும் 3 கொலைகளையும் செய்த விஷால் மற்றும் அவரது உளவாளியான சதீஷ்குமாரையும் காவல்துறை கைது செய்தது. நான்காம் மனைவி ஸ்ரேயா சம்பாவின் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: "கள்ளக்காதல் கேக்குதோ... " கொலையில் முடிந்த சந்தேகம்.!! தந்தையை காட்டிக் கொடுத்த சிறுமி.!!