அவனை பெட்ரோல் ஊத்தி எரிக்கணும்..! சொந்த உறவினரே 4 வயது சிறுமியை வயலுக்கு அழைத்துச் சென்று செய்த கொடூரம்! கொந்தளிக்கும் பெற்றோர்....!!!
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக 20 வயது உறவினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெற்றோர் கடும் வேதனையில் உள்ளனர்.
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக 20 வயது ரிஜ்பி யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உணவு வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை வயல்வெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கு கொடூரமாக நடந்துகொண்டதாகவும், பின்னர் சிறுமி வீட்டில் நடந்ததைச் சொல்லிவிடுவாள் என்ற அச்சத்தில் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. சொந்த உறவினரே குழந்தைக்கு எதிராக இத்தகைய கொடூரத்தைச் செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு
20 வயதான ரிஜ்பி யாதவ், தனது 4 வயது மருமகளுக்கு உணவு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வயல்வெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் வீட்டில் நடந்ததை பெற்றோரிடம் கூறிவிடுவாள் என்ற அச்சத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடா போன பெண்! கணவன் செய்த அந்த ஒரு சைகை ... அடுத்த நடந்த காட்சியை பாருங்க! வைரலாகும் வீடியோ..!!!
ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குழந்தையை இழந்த குடும்பம்
ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் அந்தத் தம்பதியினர் தங்களது பச்சிளம் குழந்தையை இழந்து துயரத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில், 4 வயது மகளையும் சொந்த உறவினரே கொலை செய்திருப்பது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.
சிறுமியின் பெற்றோர் கடும் வேதனையிலும் கோபத்திலும் உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர் . இளம் வயதிலேயே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.