அச்சச்சோ.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரிடம், KYC Update பெயரை சொல்லி இலட்சத்தில் மோசடி.!
அச்சச்சோ.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரிடம், KYC Update பெயரை சொல்லி இலட்சத்தில் மோசடி.!

முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரிடம் மர்ம நபர்கள் ரூ.1 இலட்சத்து 13 ஆயிரத்து 988 மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சார்ந்தவர் வினோத் காம்ப்ளி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒன் டே மேட்சில், பிறந்தநாளில் சதமடித்த பெருமையை இன்று வரை தக்கவைத்துள்ள ஒரேயொரு வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் உள்ள இல்லத்தில் வசித்து வரும் நிலையில், மும்பையில் உள்ள பாந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், KYC புதுப்பிப்பு என்ற பெயரில், மர்ம நபர் தன்னிடம் இருந்து ரூ.1,13,988 மோசடி செய்து கொள்ளையடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், மர்ம நபரின் மீது வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் அதிகாரிகள் உதவியுடன் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மர்ம நபர்களிடம் வங்கிக்கணக்கு தொடர்பான தனிப்பட்ட தகவலை பகிர வேண்டாம் என காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட்டரிடம் மோசடி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.