தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விமானத்தில் வந்த வேர்க்கடலை..! உடைத்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Foreign money smuggling using peanut in Delhi

Foreign money smuggling using peanut in Delhi Advertisement

மிகவும் நூதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணியிடம் நடைபெற்ற சோதனையில் குறிப்பிட்ட பயணி ஒருவர் கொண்டுவந்த உணவு பொருட்களின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அடுத்து அந்த பயணி கொண்டுவந்த வேர்க்கடலை, பிஸ்கெட் பாக்கெட் போன்றவற்றை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அனைவரும் வியக்கும் வகையில் வேர்கடலைகள் உடைக்கப்பட்டு, அதற்குள் வெளிநாட்டு பணத்தை சுருட்டி ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. மேலும், பிஸ்கெட் பாக்கெட்டிற்குள்ளும் வெளிநாட்டு பணம் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. இந்த பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 45 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் நூதனமாக பணத்தை கடத்திவந்த பயணியை கைது செய்துள்ள அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysteries #myths #Peanut smuggling
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story