பிணவறையில் பெண் ஊழியர்களிடம் உல்லாசம்..!! இறந்த உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த அதிர்ச்சி சம்பவம்...!!
பிணவறையில் பெண் ஊழியர்களிடம் உல்லாசம்..!! இறந்த உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த அதிர்ச்சி சம்பவம்...!!
பிணவறைக்கு வந்த பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த பிணவறை ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
குடகு மாவட்டம் மடிகேரி அருகே கடகதாலு கிராமத்தை சேர்ந்தவர் சையத் (30). இவர் கடந்த வருடம் கொரானா காலக்கட்டத்தில் மடிகேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பிணவறை பணியாளராக சேர்ந்தார். சையத் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக விருது பெற்றுள்ளார்.
கடந்த மாதம், சையத் மடிகேரியில் இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் நுழைய முயன்றதால் அந்தப்பகுதி மக்கள் அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் சையத்தை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சையத் பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சையத்தின் செல்போனை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சையத், இளம்பெண்களுடன் ஆபாசமாக பேசியது, நர்சுகள் மற்றும் மருத்துவமனை பெண் பணியாளர்களுடன் பிணவறையில் உல்லாசமாக இருந்தது, மேலும் பிணவறைக்கு வரும் பெண் உடல்களை நிர்வாணமாக வீடியோ மற்றும் படம் ஆகியவை அந்த செல்போனில் இருந்தது. இதுகுறித்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மடிகேரி அரசு மருத்துவமனையில் சையத் அனைவருடனும் நட்பாக பழகி வந்துள்ளார். நர்சுகள், பெண் பணியாளர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
அவர்களுடன் செல்போனில் ஆபாசமாக பேசுவது. மேலும் பெண் பணியாளர்கள் மற்றும் நர்சுகளை தனது வலையில் விழ வைத்து பிணவறைக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி தற்கொலை மற்றும் விபத்தில் இறந்து பிணவறைக்கு வரும் பெண் உடல்களை உடற்கூறு ஆய்விற்கு முன்பு நிர்வாணமாக படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் கரியப்பாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் மடிகேரி போலீசில் சையத் மீது புகார் அளித்தார். இந்நிலையில் சையத் தலைமறைவானார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சையத்தை தேடி வருகின்றனர். மேலும், பிணவறை பணியாளர்கள் மற்றும் சையத்துடன் பழக்கத்தில் இருந்த நர்சுகள், பெண் பணியாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.