×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டது அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள்.! ஆர்டர் செய்த பொருட்களை கேன்சல் செய்துகொள்ளலாம்.!

Flipkart and Amazon temporarily suspending their services

Advertisement

கொரோனா எதிரொலி மற்றும் பிரதமர் மோடியின் 21 நாள் ஊரடங்கு உத்தரவை ஏற்று இன்றில் இருந்து 21 நாட்களுக்கு தங்கள் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள்.

தங்கள் தளங்களில் புது ஆர்ட்டர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இரண்டு முன்னணி நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. முன்னதாக அமேசான் தளத்தில் ஆர்டர் செய்திருந்த அத்தியாவசியப் பொருட்களை மட்டும் டெலிவரி செய்வதாகவும், மற்ற பொருட்களை இந்த நிலை சரியான பிறகு டெலிவரி செய்வதாகவும் அமேசான் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.

தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் டெலிவரி செய்வதாகவும், புதிதாக எந்த ஆர்டரையும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அறிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் முன்னதாக ஆர்டர் செய்த பொருட்களை  ரத்து செய்யலாம் எனவும், அதற்காக எந்த கட்டணமும் இல்லை, மேலும், செலுத்திய பணம் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #flipkart #amazon
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story