×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அணையில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் என 5 பேர் பரிதாப பலி.! சோக சம்பவம்.!

மத்திய பிரதேசத்தில் அணையில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் என 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள பச்சேத்தி அணைக்கு குழந்தைகளுடன் சென்ற 2 பெண்கள் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.  அவர்களுடன் இருந்த 3 குழந்தைகளும் அணைநீரில் மூக்கியுள்ளனர்.  இதில் மூச்சு திணறி அவர்கள் 5 பேரும் பரிதாபமாகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவதேஷ் சர்மாவிற்கும் தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு படையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.

அந்த அணையில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டுவிட்டர் வழியே இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் பச்சேத்தி அணையில் மூழ்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டு தொகையும், உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.5 ஆயிரமும் அரசு வழங்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#died #water
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story