×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சினிமா ஸ்டூடியோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.! அதிர்ச்சி வீடியோ.!

மும்பையில் கோரேகான் பகுதியில் உள்ள திரைப்பட ஸ்டூடியோவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

Advertisement

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இதனால் நாடுமுழுவதும் திரைப்படம் மற்றும் சீரியல்களுக்கான படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா தளர்வுகளுக்கு பிறகு மும்பை கோரேகான் பகுதியில் உள்ள திரைப்பட ஸ்டூடியோவில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அங்கு படப்பிடிப்பு தளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டை பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளது.

தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ வேகமாக பரவியதால் அடுக்குமாடி கட்டடங்கள் போன்ற செட்களிலும் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைப்பதற்கு போராடிவருகின்றன. போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fire accident #cinema studio
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story