குடும்பத் தகராறில் நடந்த கொடூரம்... பஸ் ஸ்டாண்டில் இளம் பெண் குத்தி கொலை.!! 2-வது கணவனின் கோரமுகம்.!!
குடும்பத் தகராறில் நடந்த கொடூரம்... பஸ் ஸ்டாண்டில் இளம் பெண் குத்தி கொலை.!! 2-வது கணவனின் கோரமுகம்.!!
பெங்களூரு சுங்கடக்கட்டை பஸ் நிலையத்தில் காலை நேரத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன், மகளின் கண் முன்னே தாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான ரேகா என்பவர் முன்னாள் கணவனை பிரிந்து 3 மாதங்களுக்கு முன்பு 35 வயது லோகிதாஷ்வா என்ற நபரை திருமணம் செய்துள்ளார். சுங்கடக்கட்டை பகுதியிலுள்ள வாடகை வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர்.ரேகா கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். கணவர் லோகிதாஷ்வா கார் ஓட்டுநராக இருந்துள்ளார். இது
இரண்டாவது திருமணம் என்பதால் சில மாதங்களாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் மனைவி ரேகா தன் மகளை அழைத்துக் கொண்டு பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது கோபமுடன் வந்த லோகிதாஷ்வா, தன் கையிலிருந்த கத்தியை வைத்து மனைவியை தாக்க முயன்றார். மகள் அதை தடுக்க எவ்வளவு முயற்சி செய்த போதிலும் அவர் கொடூரமாக ரேகாவை தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ரேகா உயிர் பிரிந்தது
இதையும் படிங்க: "நீயெல்லாம் அப்பனா..." 2 வயது குழந்தை படுகொலை.!! அடித்தே கொன்ற தந்தை.!!
மேலும் இதை தடுக்க முயன்ற பொது மக்களிடம் அவன் கத்தியை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ரேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் தலைமறைவாக இருக்கும் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சித்தப்பாவுடன் கள்ளக்காதல்... மனைவி போட்ட மெகா பிளான்.!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்.!!