தான் பெற்ற மகள் என்று கூட பாராமல், தந்தை செய்த கொடூர செயல்!. அதிர்ச்சி சம்பவம்!.
father killed his daughter for her love

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த சைதன்யா என்ற இளைஞன் அதே பகுதியை சேர்ந்த இந்திரஜா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சைதன்யா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்திரஜா தற்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதனையடுத்து காதல் விஷயம், இந்திராஜாவின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. சைதன்யா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இந்திரஜா அவரது காதலை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் இந்திரஜாவை கொலை செய்துள்ளார். மேலும் யாருக்கும் தெரியாமல் உடலை எரித்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். இந்திராஜாவின் உறவினர்கள், இந்திரஜா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக அனைவரிடமும் கூறி வந்துள்ளனர்.