அடக்கொடுமையே! இதுதான் காரணமா? தனது 3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை! வெளியான பகீர் சம்பவம்!
father killed 3 children for girl baby
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டம் கம்பாலியா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ரசிக் சோலங்கி. 35 வயது நிறைந்த இவர் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு 7 வயதில் அஞ்சலி, 5 வயதில் ரியா, 3 வயதில் ஜல்பா என மூன்று பெண் இருந்துள்ளனர்.
இந்நிலையில், சோலங்கியின் மனைவி நான்காவதாக மீண்டும் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நான்காவதும் பெண்குழந்தை பிறந்ததால் மனவிரக்தி அடைந்த சோலங்கி தனது மூன்று பெண்பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளிக் கொன்றுள்ளார். அதனை தொடர்ந்து அவரும் வீட்டின் முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனைவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், சோலாங்கி தனது மனைவிக்கு நான்காவதும்பெண் குழந்தையை பெற்றதால் பெரும் விரக்தி அடைந்துள்ளார். மேலும் அவருக்கு கடன் சுமையும் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே அவர் தனது பிள்ளைகளை கிணற்றில் தள்ளிகொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறியுள்ளனர். மேலும் அப்பொழுது சோலங்கி பிறந்த குழந்தையுடன் பிரசவசம் மருத்துவமனையில் இருந்துள்ளார்.