"சொந்த மகளை கர்ப்பமாக்கி வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற தந்தை... " சுற்றி வளைத்த பொதுமக்கள்.!! போலீஸ் விசாரணை.!!
சொந்த மகளை கர்ப்பமாக்கி வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற தந்தை... சுற்றி வளைத்த பொதுமக்கள்.!! போலீஸ் விசாரணை.!!
கர்நாடக மாநிலத்தில் சொந்த மகளை 4 மாதங்கள் கர்ப்பமாக்கிய தந்தை வீட்டை விட்டு தப்பிக்க முயன்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள ஹோஸ்துர்க் என்ற கிராமம் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்டது. இந்த பகுதியில் 45 வயதான நபர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதான ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாணவிக்கு தீராத உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மாணவியை மங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்ததில் அவர் 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு புகாரளிக்கபட்டது. மாணவியிடம் போலீசார் செய்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் தன்னுடைய இந்த கோலத்திற்கு தந்தை தான் காரணமென மாணவி கூறியுள்ளார். மாணவியின் தந்தை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: தீராத கடன் சுமை... விபரீத முடிவெடுத்த குடும்பம்.!! 3 பேர் பலி.!!
மாணவியின் அறிக்கையின் பேரில் தலைமறைவாகயிருக்கும் தந்தையை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த தந்தை பாஸ்போர்ட் எடுக்க வீட்டிற்கு வந்தபோது அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்தது அவரது தந்தையா.? என்பதை உறுதி செய்ய டி.என்.ஏ பரிசோதனை செய்ய போலீசார் உத்தரவிட்டுள்ளனர் .
இதையும் படிங்க: சிறுமி கர்ப்பம்... மது போதையில் தந்தை செய்த கொடூரம்.!!