மனிதனுக்கு இப்படியெல்லாம் கூட மரணம் வருமா? வெளியான அதிர்ச்சி வீடியோ.
Famous singer dead while singing song in stage

கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்துவருகிறது. பல்வேறு இடங்களில் பலவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மக்கள் ஆர்வமுடன் வழிபட்டு வருகின்றனர். மேலும், விநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் கடநாடக மாநிலம் மங்களூரில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதத்தில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்கு கொங்கனி இசையமைப்பாளரும் பிரபல பாடகருமான ஜெர்ரி பஜ்ஜோடி நிகழ்ச்சி நடத்தினார்.
இசை நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் மேடையில் பாடிக்கொண்டிருந்த அவர் அப்படியே சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை உடனே மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே பிரபல பாடகரின் உயிர் போன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.