×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வாக்குரிமை பறிக்கபட வேண்டும்; பிரபல யோகா குரு பரபரப்பு பேச்சு.!

family plan - yoga guru ramdev - up

Advertisement

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களின் வாக்குரிமை, அரசு சலுகைகள் பறிக்கபட வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய இந்து சமய துறவியான இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கூறப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு ராம்தேவ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிகரித்து வரும் மக்கள்தொகை குறித்து கவலை தெரிவித்தார். இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களை அரசாங்க பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு அரசு வேலையும் கொடுக்கக்கூடாது. அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களிடத்திடலும் இந்த விதிமுறையை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மக்கள்தொகை அதுவாகவே குறைந்துவிடும் எனத் தெரிவித்தார். 

குரு ராம்தேவ் இவ்வாறு பேசுவது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தன்னைப் போன்று திருமண வாழ்க்கைக்கு செல்லாதவர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது திருமணமானவர்களை பற்றி அவர் கருத்துக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yoga guru #guruRamdev #India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story