×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்கலங்க வைக்கும் கொரோனா மரணத்தின் பின்விளைவு..! ஒரு குடும்பமே ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்.!

Family commit suicide due to father dead for corona in Andhra

Advertisement

கொரோனாவால் நபர் ஒருவர் உயிரிழந்தநிலையில் அவரது மனைவி, மகள், மகன் மூவரும் ஆற்றில் குதித்து  தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோமூர் பகுதியை சேர்ந்தவர் நாணரசையா. இவருக்கு மனைவி மற்றும் பனிகுமார் என்ற மகனும், அபர்ணா என்ற ஒரு மகளும் இருந்துள்ளனர். பனிகுமார் குஜராத்தில் சுரங்க பொறியாளராக பணியாற்றி வந்தார். மகள் அபர்ணா மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப தலைவனான நாணரசையாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 16 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். கொரோனா மரணம் என்பதால் இவரது இறுதி சடங்கு ஆதரவற்ற ஒருவரை போல் எந்த நபரும் இல்லாமல் நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா அச்சம் காரணமாக உறவினர்களும் யாரும் துக்கம் விசாரிக்க வர முடியாத சூழல். இந்நிலையில் நாணரசையா இறந்த சோகத்தில் இருந்து மீளாத அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து நாணரசையாவின் மனைவி, மகன் மற்றும் மகள் மூவரும் கோமூரில் உள்ள கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த தகவல் காவல்துறையினருக்கு தறிவிக்கப்பட்டதை அடுத்து உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தந்தை இறந்த சோகம் தாங்காமல் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #dead #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story