×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேரளா வெள்ள நிவாரணத்துக்கு FACEBOOK நிறுவனம் எவ்வளவு நிவாரணம் வழங்கியது தெரியுமா?

Facebook donated flood relief fund to kerala through goonj

Advertisement

கேரளா மாநிலத்தில் கடந்த நூறு வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்கள் அனைவரும் தங்க இடம் இல்லாமல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். உன்ன உணவில்லாமல், தங்களது உடைமைகளை இழந்து உறவுகளை இழந்து தவித்துவருகின்றனர்.

உலகின் பல மூலைகளில் இருந்து கேரளாவிற்கு நிவாரணங்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர் நிவாரண தொகையை அளித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.75 கோடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் (Community Resilience Fund for GOONJ ) எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கவுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவன ஊடகத்தொடர்பாளர் கூறுகையில், கடந்த சில நாள்களில் ஃபேஸ்புக்கின் லைவ் வீடியோ, குரூப்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலரும் உதவி வருகின்றனர். இதில் நாங்கள் ஒரு சிறிய பங்காக 2,50,000 டாலர்களை GOONJ தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kerala flood #Kerala flood relief fund #Facebook #Goonj
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story