EPFO பயனர்களுக்கு முக்கிய தகவல்.. 6- கிளைம் படிவங்கள் பற்றி தெரியுமா?.! இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க..!!
EPFO பயனர்களுக்கு முக்கிய தகவல்.. 6- கிளைம் படிவங்கள் பற்றி தெரியுமா?.! இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க..!!
வருங்கால வைப்பு நிதி அமைப்பு என்று அழைக்கப்படும் EPF தனது உறுப்பினர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்குகிறது. ஊழியர்களுடைய வைப்பு நிதி, ஓய்வூதிய திட்டம், ஊழியர்களின் காப்பீட்டு திட்டம் போன்றவற்றை வழங்குவதன் மூலமாக ஊழியர்கள் எதிர்காலத்தில் பயனடைகிறார்கள்.
1952-ன் EPF திட்டம், 1995-ன் ஓய்வூதிய முறை, 1976-ன் ஓய்வூதிய மற்றும் ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் போன்றவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. இது திட்ட உறுப்பினர்கள் முழுமையாக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது. இன்று ஆறு EPF கிளைம் படிவங்கள் பற்றி காணலாம்.
★படிவம் 10C : இதன் மூலம் உங்களின் முதலாளி பங்களிப்பிலிருந்து பணத்தை எடுப்பதற்கு பயன்படுத்தலாம்.
★படிவம் 10D : மாதாந்திர ஓய்வூதியம் பெற விரும்பும் நபர்கள் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.
★படிவம் 31 : நமது EPF கணக்கிலிருந்து கடன்கள் மற்றும் திரும்ப பெறுதலுக்கு இவை பயன்படுத்தப்படுகிறது.
★படிவம் 13 : நமது நிதியை ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாற்ற அனுமதித்து, நிதிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளதை உறுதி செய்கிறது.
★படிவம் 20 : இதன் மூலமாக குடும்ப உறுப்பினர் அல்லது நாமினி ஊழியர் இருந்தால் PF நிதியை பெரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது
★படிவம் 51F : ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு பலன்களைப் பெற பயன்படுத்தப்படுகிறது.