×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எங்களுக்கு அவர்கள் கொல்லி வைக்கக்கூடாது! தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர்! வேதனையுடன் எழுதிய இறுதிகடிதம்!

Elder couple commits suicide for poverity

Advertisement

பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்து வந்தவர் 60 வயது நிறைந்த குணசேகரன். அவரது மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். குணசேகரன் கார்பென்டராக வேலை பார்த்துவந்தார். மேலும் கொரோனா காரணமாக சமீபத்தில் வாட்ச்மேன் வேலைக்கும் சென்று வந்துள்ளார். 

இந்நிலையில் இவரது முதல் இருமகன்களும் திருமணமான நிலையில்  தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். அவர்களது மூன்றாவது மகன் ஸ்ரீதர் மட்டும் திருமணமாகாத நிலையில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மதுவுக்கு அடிமையான ஸ்ரீதர் எப்பவாது மட்டும் வேலைக்கு செல்வார். மற்ற நேரங்களில் ஊர் சுற்றிவரும் அவர் குடிப்பதற்கு பணம் தேவைப்படும் போது தாய் தந்தையுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கால் குணசேகரனின் செக்யூரிட்டி வேலை பறிபோகியுள்ளது. மேலும் மகன்களும் எந்த உதவியும் செய்யாத நிலையில் போதிய வருமானம் இன்றி சாப்பிட கூட வழியில்லாமல் இருவரும் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மனமுடைந்த இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும் இறப்பிற்கு முன்பு அவர்கள் எழுதிய கடிதத்தில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை காவல்துறையினர் தான் அடக்கம் செய்யவேண்டும். எனது மகன்கள் கொல்லிவைக்க கூடாது என்று எழுதியுள்ளனர்.

இந்நிலையில்  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள்  இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து  குணசேகரன் மற்றும் செல்வி  தம்பதிகளின் கடைசி விருப்பப்படி உதவி ஆணையர் சுரேந்தர் தலைமையில் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #poor #3 sons #Sons
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story