×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.1.50 கோடி மதிப்புள்ள கல்வி உதவித்தொகையை வென்றெடுத்த 10 ஆம் வகுப்பு மாணவி..!

எடுபீர்-லேஷின் கல்வி உதவித்தொகையை பெங்களூர் மாணவி வென்றெடுத்தார். இதனால் அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அமெரிக்க பள்ளியில் இலவசமாக பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement

எடுபீர்-லேஷின் கல்வி உதவித்தொகையை பெங்களூர் மாணவி வென்றெடுத்தார். இதனால் அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அமெரிக்க பள்ளியில் இலவசமாக பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், குண்டலஹள்ளி ரியான் இன்டர்நெஷனல் பள்ளியில் பயின்று வந்த மாணவி மானஷி தினேஷ். இவர் 2 இலட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,49,86,000) மதிப்புள்ள எடுபீர்-லேஷின் (EduPeer - Leysin Scholarship) உதவித்தொகையை வென்றுள்ளார்.

இந்த உதவித்தொகை, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள (Leysin American School) லேய்சின் அமெரிக்கன் பள்ளியில் IB திட்டம் வாயிலாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிப்பை தொடரவும், இரண்டு வருட செலவையும் நிவர்த்தி செய்கிறது. சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட திறனறிவு தேர்வில் ஒருவராக கலந்துகொண்ட மானஷி தினேஷ் போட்டியில் வெற்றிவாகை சூடியுள்ளார்.

10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை போல, 26 பேர் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் தங்களைப்பற்றிய கட்டுரை, குவாண்டம் இயற்பியலில் இருந்து மரபணு பிளவு வரை என அவர்களுடைய ஆர்வத்தில் உள்ள தலைப்புகளின் கீழ் வீடியோ தயாரித்து வழங்கப்பட்டது. 

இதன் வாயிலாக, இறுதியாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரான மாணவி மானஷி தினேஷ் 2 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள எடுபீர்-லேசின் உதவித்தொகையை வென்றுள்ளார். இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 6 மாணவர்கள் மும்பை, மீரட், துர்காபூர் பகுதியை சார்ந்தவர்கள் ஆவார்கள். 

இந்த வெற்றிவாகை சூடியது தொடர்பாக மாணவி மானஷி தினேஷ் கூறுகையில், "இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி அடைந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். அனைவரையும் நான் விண்ணப்பிக்க ஊக்குவிப்பேன். போட்டியில் கலந்துகொண்டது அற்புதமாக இருந்தது. வாய்ப்பை வழங்கிய எடுபீர்க்கு நன்றி" என்று தெரிவித்தார். 

இதுகுறித்து, எடுபீர்-லேசின் பள்ளியின் இணை இயக்குனர் தமரா யஹ்போபி (Tamara Yahfoufi) தெரிவிக்கையில், "எங்களிடம் அற்புதமான மாணவர்கள் இருக்கிறார்கள். லேஷின் அமெரிக்க பள்ளியில் வெற்றியாளரை வரவேற்க மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bangalore #India #America #Manasi Dinesh #scholarship #Edupeer Leysin #Switcherland
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story