×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டின் மேற்கூரையை உடைத்து நுழைந்த திருடன்! நகை, பணங்களை மூட்டை கட்டியாச்சு ஆனால்....திருடன் செய்த அந்த காரியம் இருக்கே! கதவை திறந்ததும் ஷாக்கான வீட்டின் ஓனர்!!!

கர்நாடகாவில் திருடச் சென்ற வீட்டிலேயே போதையில் தூங்கிய திருடன் கையும் களவுமாக சிக்கினார். சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

கர்நாடகாவில் அரங்கேறிய ஒரு வினோதமான திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. திருடச் சென்ற வீட்டிலேயே போதையில் குறட்டை விட்டுத் தூங்கிய திருடன், வீட்டின் உரிமையாளரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் மேற்கூரை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள்

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் பகுதியில் வசித்து வரும் பிரேம்நாத், தனது குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றிருந்தார். அவர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை மூட்டை கட்டி எடுத்துள்ளனர்.

வீடு திரும்பிய உரிமையாளருக்கு அதிர்ச்சி

பயணத்தை முடித்து வீடு திரும்பிய பிரேம்நாத், கதவைத் திறந்து உள்ளே சென்றபோது தரையில் போர்வையைப் போர்த்திக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த நபரை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை எழுப்பி விசாரித்தபோது முரண்பட்ட பதில்கள் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக பீரோவைச் சோதித்ததில் நகைகள் மற்றும் பணம் காணாமல் போனது உறுதியானது.

இதையும் படிங்க: 40 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 67 வயது முதியவர்! அடுத்து பண்ணை வீட்டில் நடந்த அதிர்ச்சி! முதியவர் போட்ட பலே நாடகம்! விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

போதையில் தூங்கிய திருடன் கைது

அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொள்ளையடித்த பிறகு, போதையில் தூங்கிய திருடன் அங்கேயே அயர்ந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது கூட்டாளி நகைகளுடன் தப்பியோடிய நிலையில், தேவராஜ் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றச்செயலுக்குப் பிறகே தப்பிச் செல்லாமல், போதையின் காரணமாக தூங்கியதே இந்த வழக்கில் திருடனை சிக்க வைத்துள்ளது. இந்த வினோத சம்பவம் சிக்கபள்ளாப்பூர் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கர்நாடகா திருட்டு #Drunk Thief #சிக்கபள்ளாப்பூர் #Gauribidanur Crime #போலீஸ் விசாரணை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story