சுவைத்து சுவைத்து சாப்பிட்ட மசாலா பொருளில் கழுதை சாணம் கலப்படம்.. பதறவைக்கும் சம்பவம்..
மசாலா பொருட்களில் கழுதை சாணம், சாப்பிட முடியாத செயற்கை வண்ணங்கள், வைக்கோல் போன்ற போலி பொருட்களை வைத்து தயாரித்து விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மசாலா பொருட்களில் கழுதை சாணம், சாப்பிட முடியாத செயற்கை வண்ணங்கள், வைக்கோல் போன்ற போலி பொருட்களை வைத்து தயாரித்து விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாப்பிடும் உணவு பொருட்களில் கூட பல்வேறு போலியான நிறுவனங்கள் கலப்பட பொருட்களை கலந்துவருவது வாடிக்கையாகிவருகிறது. இந்நிலையில் "டைம்ஸ் ஆப் இந்தியா" நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் இயங்கிவந்த போலியான மசாலா பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
போலீசார் அந்த நிறுவனத்தில் நடத்திய சோதனையின்போது, பல்வேறு உள்ளூர் மசாலா பொருட்களுடன் கழுதையின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடி, சாப்பிட முடியாத செயற்கை வண்ணங்கள், அமிலம் மற்றும் வைக்கோல் போன்ற போலி பொருட்களை கலந்து விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து போலீசார் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் அனூப் வர்ஷ்னி என்பவரை கைது செய்துளநிலையில், அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் தொழிற்சாலையில் இருந்து சில மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.