×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டில் தனிமையில் தூங்கி கொண்டிருந்த வயதான பெண்! திடீரென வீட்டிற்குள் புகுந்த தெரு நாய்கள்! கடைசியில் நிகழ்ந்த சோகம்.

Dog rajammal

Advertisement

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு வடக்கேகாடு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் நாயர்- ராஜம்மாள் தம்பதியினர். இவர்கள் இருவரும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் பிள்ளைகள் வெளி ஊரில் வேலை செய்து வருவதால் தனிமையில் வாழ்த்து வந்துள்ளனர் அந்த வயதான தம்பதியினர்.

இந்நிலையில் ராஜம்மாளின் கணவர் பரமேஸ்வரன் திடீரென ஒரு நாள் இறந்து விடவே ராஜம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அவ்வப்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஒரு நாள் பகலில் ராஜம்மாள் வீட்டிலில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது வீடு சரியாக மூடாமல் இருந்துள்ளது. இதனால் தெரு நாய்கள் உள்ளே நுழைந்து ராஜம்மாளை தாக்கியுள்ளன. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.

அப்போது நாய்கள் அவரை கடித்து குதறுவதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் நாயை விரட்டி விட்டு ராஜம்மாளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dog #Rajammal #KERALA
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story