×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐ.நா வெளியிட்டுள்ள சிறந்த சுற்றுலா கிராமம்.. இந்தியாவில் எந்த கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது தெரியுமா.?

ஐ.நா வெளியிட்டுள்ள சிறந்த சுற்றுலா கிராமம்.. இந்தியாவில் எந்த கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது தெரியுமா.?

Advertisement

சுற்றுலா என்றாலே நம் மனம் மகிழ்ச்சியில் எங்கேயோ சென்று விடும். ஒருவிதமான இனம் புரிய ஆனந்தம் நாம் சுற்றுலா செல்லும்போது ஏற்படுகிறது. நாம் சுற்றுலா செல்லும் இடங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து அங்கு சென்று நேரம் செலவிடுவதில் இனம்புரியா மகிழ்ச்சி உண்டாகிறது.

மேலும் சுற்றுலா என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோளாகவும் பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்க சக்தியாகவும் அறியப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமங்களின் பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் இந்த தேர்வு முறையானது இயற்கை வளங்களை பேணுவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, போக்குவரத்து, சுகாதாரம், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு போன்ற பல்வேறு விதமான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சிறந்த சுற்றுலாக்கான இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் தோர்டோ கிராமம் இடம் பிடித்துள்ளது. இந்த கிராமமானது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பூஜ் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது. மேலும் இந்த கிராமமானது கட்ச் பாலைவனத்துக்கு புகழ்பெற்றதாக அமைந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Best tourist village #Gujarat dhordo #UN selected
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story