×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குட்கா மற்றும் குடி போதைக்கு அடிமையான பெண்: மன உளைச்சலால் கணவன் செய்த காரியம்...!

குட்கா மற்றும் குடி போதைக்கு அடிமையான பெண்: மன உளைச்சலால் கணவன் செய்த காரியம்...!

Advertisement

இளைஞர் ஒருவர், தனது மனைவியின் மது மற்றும் குட்கா பழக்கத்தினால் மிகவும் மனவுளச்சலுக்கு உள்ளாகி விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சத்திஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டம் பாங்கிமோங்ரா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்கோராவைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஏழு நாட்களான நிலையில், கடந்த 2015 மே 26 ஆம் தேதி காலை, அவரது மனைவி படுக்கையில் மயங்கிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அப்போது அவர் மனைவி மது அருந்தியதோடு, குட்காவுக்கும் அடிமையாகி இருப்பது தெரிய வந்தது.

இந்த விஷயம் பெண்ணின் மாமியார்களுக்கு தெரிய வந்ததும், அவர்கள் அந்த பெண்ணை திருத்த முயன்றனர். ஆனால் அவர் சிறிதும் ஒத்துழைக்கவில்லை. மேலும், குட்கா சாப்பிட்டுவிட்டு படுக்கையறையில் எச்சில் துப்பியுள்ளர், அதனை தடுத்த கணவரிடம் தகராறு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 30 தேதி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

மேலும் அவர் இரண்டு முறை மாடியில் இருந்து குதித்துள்ளார், இரண்டு முறை பூச்சி மருந்தை குடித்துள்ளார். இருந்த போதிலும், ஒவ்வொரு முறையும் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். மனைவியின் இந்த செயலால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர் விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை குடும்பநல கோர்ட்  நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில்  மேல்முறையீடு செய்தார். 

சத்தீஸ்கர் ஐகோர்ட்டுக்கு இந்த வழக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, சத்தீஸ்கர் ஐகோர்ட், ஆண்களைப் போல் மனைவி, பான் மசாலா, குட்கா, மது போன்றவற்றுடன் அசைவம் சாப்பிட்டு விட்டு கணவனை துன்புறுத்துவது கொடுமையானது என கூறி குடும்ப நல கோர்ட்டின் உத்தரவை நிராகரித்தது. நீதிபதி கவுதம் பாதுரி மற்றும் நீதிபதி ராதாகிஷன் அகர்வால் அடங்கிய இரட்டை அமர்வு, கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை ஏற்றுக்கொண்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chhattisgarh #Gutka #liquor #Family Welfare Court #divorce
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story