×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமான ஒரு நாளிலேயே விவாகரத்தா? அடக்கொடுமையே! இதுதான் காரணமா!!

divorce in oneday after marriage

Advertisement

நாடு எவ்வளவு தான் அறிவியல் மயமாகி முன்னேறி சென்றாலும் தற்போது வரை வரதட்சணை வாங்கும் வழக்கத்தில் மட்டும் என்ற மாற்றமும் ஏற்படவில்லை. மேலும் இதனாலேயே பெண் குழந்தைகள் என்றால் பெற்றோர்கள் அஞ்சும் சூழல் தற்போதைய கால கட்டத்திலும் நிலவி வருகிறது.

மேலும் இதுகுறித்து எவ்வளவுதான் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் வழக்கம் மட்டுமே மாறுவதாக இல்லை. மேலும் இதனால் அவ்வப்போது பெற்றோர்கள் மற்றும் இளம்பெண்கள் உயிரிழக்கும் சூழல் தற்போதும் இருந்து வருகிறது. 

இந்நிலையில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான சிலநாட்களிலேயே வாலிபர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் பாராபங்கி அருகேயுள்ள ஜஹாங்கீர்பாத் பகுதியில் வசித்து வருபவர் ஷாகே ஆலம். இவருக்கு ருக்ஷனா பானு என்ற பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மணமகனுக்கு மோட்டார் பைக் வாங்கி தர வேண்டும் என திருமணத்திற்கு முன்னரே பெண் வீட்டாரிடம் கேட்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து வாங்கி தருவதாக பெண் வீட்டார்களும் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 ஆனால் திருமணம் முடிந்தும் பெண் வீட்டார் கூறியபடி பைக் வாங்கித் தரவில்லை. இதனால் கேட்ட வரதட்சனையை தரவில்லை என்று திருமணமான 24 மணி நேரத்திலேயே ஷாகே ஆலம் முத்தலாக் கூறி தனது மனைவியை  விவாகரத்து செய்தார். 

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண் வீட்டார்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#divorce #marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story